வெள்ளவத்தையில் நல்ல உணவுக்காக அலையும் என்போன்றவர்களுகான இணைய தளம் .

எச்சரிக்கை

வெள்ளைவத்தை மேரி பிரவுன் யாழ் restaurant இல் அசைவ சாப்பாடு சாப்பிடுபவர்கள் கவனமாக இருக்கவும் . சிலவேளைகளில் பழைய உணவை பரிமாறுகிறார்கள் . பொதுவாக இறைச்சி கறி , கொத்து ரொட்டி இவை பழையவற்றை சூடு காட்டியே வழங்கபடுகிறது . இது குறிப்பாக marine டிரைவ் இலுள்ள மேரி பிரவுன் யாழ் restaurant இலையேயே நடைபெறுகிறது . மேரி பிரவுன் சென்னை restaurant இல் இப்படி பட்ட அனுபவம் இதுவரை கிடைக்கவில்லை

குறிப்பு :
இங்கு உணவு உண்ணும் போது கவனமாக இருபது நன்று அல்லது , தவிர்துகொள்வது சால சிறந்தது


யாழ்ப்பாண கடை

வெள்ளைவத்தை ஸ்டேஷன் ரோடு இல தனியார் கல்விநிலையம் , பதிப்பகம் இவற்றிற்கு பக்கத்தில இருக்கு . சின்ன கடை தான். ஆனா அசைவ சாப்பாடு நல்லா இருக்கும். உறைப்பு கொஞ்சம் கூட . ஆனா நல்லா இருக்கும் யாழ்ப்பாண சாப்பாடு மாதிரி இருகிறதால யாழ்ப்பாண கடை எண்டு சொல்லுவாங்க . ஒருமுறை சுவைத்து பாருங்க .

சைவ சாப்பாடு

NOLIMIT இக்கு பக்கத்தில இருக்கிற சாப்பாட்டுக்கடைஇல மத்தியான சாப்பாடு நல்லா இருக்கும். வெள்ளவத்தை இல சைவ சாப்பாடு சாப்பிட ஒரு நல்ல இடம். (self service ) நாங்களே போட்டு சாப்பிடலாம். எவ்வளவும் சாப்பிடலாம் . 100 ரூபாய் தான் ஒருமுறை போய் பாருங்க.

பாயசம் , மோர் எல்லாம் தாறாங்க

பரோட்டா with குருமா

வெள்ளைவத்தை மேரி பிரவுன் சென்னை restaurent உருத்திரா மாவத்தை, பம்பலபிட்டி ரெண்டு இடத்திலையும் இருக்கு

சுட சுட 2 பரோட்டா குறுமாவூட தருவாங்க . சூப்பர் இருக்கும் . ஒரு நேர சாப்பாட்டுக்கு ஒரு ஆள் வயிறு புல்லா சாப்பிடலாம். i think kuruma வோட சாப்பிடும் போது தான் அவளவு taste .சர்வீஸ் சார்ஜ் இல்ல.70 ரூபாய் thaan ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. தண்ணி தாராங்க தேவையான அளவு

Try it something different


மேரி பிரவுன் சென்னை restaurent உருத்திரா மாவத்தை, பம்பலபிட்டி ரெண்டிலயும் 70 ரூபாய் பட் யாழ் restaurent இல 80 ரூபாய் ஏன் எண்டு தெரியல

அப்பம்

பம்பலபிட்டி பிளட்ஸ்(Flats) இற்கு முன்பாக . HIACE வான் இல் ஒரு சிங்கள பெண் அப்பா சுட்டு விற்பார். மாலை நேரங்களில் நல்ல பால் அப்பம், முட்டை அப்பம் கிடைக்கும் , அதிலேயே கை ஏந்தி பவன் பூல சாபிடலாம். அல்லது வீட்டுக்கு எடுத்து செல்லலாம்.

ஒரு முறை சுவைத்து பாருங்கள்

புட்டு கொத்து

நளபாகம் :

வெள்ளைவத்தை மங்களா பஸ் ஹோல்ட் அல்லது அற்பிகோ சுபெர்மர்கட் அண்டிய பகுதியில் குறிப்பாக சம்பத் பேங்க் இற்கு பக்கத்துக்கு ஒழுங்கையில் (லேன்) அமைந்து உள்ள சாப்பாட்டு கடை.

புட்டு கொத்து நூறு ரூபாய்க்கு தேவையான அளவு போடுறாங்க.சிவப்பு புட்டு நல்லா இருக்கு , கொடுக்கிற காசுக்கு வயிறு நிறைய சாப்பிடலாம்.

பார்சல் கட்டினா பொதுவா கொஞ்சம் கூட வரும் : ஹ ஹ :)

குறிப்பு : தேவையான கறியும் சொல்லி பார்சல் கட்டலாம்
Eg: நண்டு குழம்பு (தனி குழம்பு தான் , எக்ஸ்ட்ரா காசு இல்ல )தெரிஞ்சவங்க விடுங்க
தெரியாதவங்க ட்ரை பண்ணுங்க....அறிமுகம்

ஈழத்திலிருந்து பல்வேறு தேவைகளுக்காக இலங்கை வந்து தமிழர் தேசமாம் குட்டி யாழ்பாணம் என அழைக்கப்படும் வெள்ளவத்தையில் நல்ல உணவுக்காக அலையும் என்போன்றவர்களுகான இணைய தளம் .

இங்கு நல்ல சாப்பாடு கிடைக்கும் எனக்கு தெரிந்த இடங்களை ஒவொன்றாக உங்களுக்கு அறிமுக படுத்துகிறேன் . உங்களுக்கு தெரிந்த இடங்களையும் இங்கு கூறுங்கள் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்